மேலும் செய்திகள்
நத்தம் பதிவேடு இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
17-Oct-2025
நத்தம்: அரசு பஸ் ஆட்டோ மீது மோதியதில் அதில் பயணித்த -பெண் பலியானார். பள்ளி மாணவர்கள் உட்பட, 10 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பூதகுடியைச் சேர்ந்தவர் சந்திரன், 53. இவர், ஆட்டோவில் திண்டுக்கல்லிலிருந்து 8 மாணவர்கள், பயணியரை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அம்மன்குளம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ கவிழ்ந்ததில் மேலுார் -பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்த நைனம்மாள், 43, என்பவர் பலியானார். சமுத்திராபட்டியைச் சேர்த்த பள்ளி மாணவர்கள், 8 பேர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Oct-2025