உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நத்தம்: நத்தம் அருகே துறைகமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லுாரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற விவசாய பணி திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை நடத்தினர். இதில் புகையிலை, போதைப் பொருட்களைத் தவிர்த்தல், இணையப் பாதுகாப்பு, துரித உணவுகளின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவிகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ‘நட்பு’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை