உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சமுதாய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் நாகரத்தினம், செயலாளர் நாகராஜன், இணை நிறுவனர் சங்கர் துவக்கி வைத்தனர். போதை பொருள், பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, சாலை விதிகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். தேசிய தலைவர்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள், ஆபரேஷன் சிந்துார், ஐவகை நிலங்கள் குறித்த அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றன. சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே மாணவர்கள் ஊர்வலம் முன் சாகசங்களை செய்து வந்தனர். ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் துவங்கி பள்ளியில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்