உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யம்பாளையம் கோயிலில் ஆண்கள் பங்கேற்ற திருவிழா

அய்யம்பாளையம் கோயிலில் ஆண்கள் பங்கேற்ற திருவிழா

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் சடையாண்டி கோயில் உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சடையாண்டியை இந்த ஊரின் காவல் தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். விவசாயம் செழிக்க வேண்டி சடையாண்டிக்கு புரட்டாசி திருவிழா நடந்தது. அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இதை கொண்டு பக்தர்கள் சமையல் செய்தனர்.அதன்பின்பு நடந்த . நள்ளிரவு பூஜையில் ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் அசைவ விருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ