மேலும் செய்திகள்
ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
01-Jun-2025
திண்டுக்கல்: நாகல்நகர் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.பக்ரீத் பண்டிகை ஜூன் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக திண்டுக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள நாகல் நகரில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது.இதில் வெள்ளோடு, நரசிங்கபுரம், நல்லம நாயக்கன்பட்டி, பஞ்சம்பட்டி, வேடப்பட்டி, திண்டுக்கல் என பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையிலே வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.80 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள், விவசாயிகள்தெரிவித்தனர்.
01-Jun-2025