பாலாஜி பவன் ஓட்டல் 25வது ஆண்டு துவக்க விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் ஓட்டல் 25வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது, வர்த்தக சங்கம், மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்து குத்து விளக்கேற்றினார். உரிமையாளர் ஆனந்த ஜோதி, நிர்வாக இயக்குனர் தனுஷ், உரிமையாளர் ராஜ்குமார் வரவேற்றனர். ஜி. பி. என்டர்பிரைசஸ் ரமேஷ், ஆச்சிஸ் ஓட்டல் உரிமையாளர் ரமேஷ், சேர்மன் சாமி , மளிகை உரிமையாளர்கள் காந்தி, ஜீ.இ. கெமிக்கல்ஸ் உரிமையாளர் குரு, டி,ஆர்.பி., டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரகு, அருண் மார்க்கெட்டிங் பாலசுப்பிரமணியம், அருணா சேம்பர் இயக்குனர் மணிகண்டன் கலந்து கொண்டனர். உரிமையாளர் ராஜ்குமார் கூறுகையில்,'' 25 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்று மாநகரில் 3 கிளைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் காலை ,மதியம் அறுசுவை உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள், உணவருந்தியவர்களுக்கு நிறுவன சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது '' என்றார்.