உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பறவைகள் கணக்கெடுப்பு பணி

 பறவைகள் கணக்கெடுப்பு பணி

நத்தம்: நத்தம் அருகே ஊராளிபட்டி மற்றும் கோபால்பட்டி பகுதியில் அழகர்கோவில் வனச்சரகம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. வனச்சரக அலுவலர் சுந்தரவேல் உள்ளிட்ட வனத்துறையினர் கணக்கெடுப்பு பணி நடத்தினர். இதில் வனக்காப்பாளர்கள் சங்கீதா,அம்சபாண்டி, வனக்காவலர்கள் இஷாபிரியா, வனஜா, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதைப்போலவே நத்தம் அருகே சிறுகுடி- கேசரிக்குளம் பகுதியில் வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனச்சரகர் ராஜா தலைமையிலான வனப்பணியாளர்கள், பழனி ஆண்டவர் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். பரப்பலாறு அணை, சடையன் குளம், சத்திரப்பட்டி கருங்குளம், நல்லதங்காள் ஓடை ஆகிய பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் ஊசி வால் வாத்து, செந்நிற நாரை, மடையன், சின்ன கொக்கு, நெடலை கொக்கு உள்ளிட்ட 43 வகையான பறவை இனங்களும் சுமார் 750 பறவைகளும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். பழநி : பாலாறு பொருந்தலாறு அணை கோதைமங்கலம், கலிக்க நாயக்கன்பட்டி குளங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இரட்டைவால் குருவி, கரிச்சான் குருவி நீர் குருவி செங்கால் நாரை நாரை நீர்க்காகம் 50க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர் கோகுல கண்ணன் வனவர் பழனிச்சாமி வனப்பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள் பங்கேற்றனர். கொடைக்கானல்: -ஏரி மற்றும் மனோரத்தினம் சோலை அணைப்பகுதியில் ரேஞ்சர் பழனி குமார் தலைமையில் நடந்தது. வனவர்கள் அப்துல்ரகுமான், 20க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் தெரிய வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை