பா.ஜ., ஆய்வு கூட்டம்
பழநி: பழநி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. பா.ஜ., உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆலோசனை வழங்கினர். உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில் குமார், வழக்கறிஞர் ராமசாமி, செந்தில் அண்ணாமலை பங்கேற்றனர்.