புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல்: மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞரை அவமதிக்கும் விதம் நடந்துகொண்டதாக, மாஜிஸ்திரேட்டுக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. சங்க தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் பேசினர். துணைத்தலைவர் தயாள சுந்தர், இணை செயலாளர் அன்பு ஹரிஹரன், பொருளாளர் காயத்ரி தேவி கலந்துகொண்டனர்.