உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விபத்தில் கொத்தனார்கள் பலி

 விபத்தில் கொத்தனார்கள் பலி

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் - குமுளி ரோட்டில் டூவீலர் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் இரு கொத்தனார்கள் பலியாகினர். ஒட்டுபட்டியை சேர்ந்த கொத்தனார்கள் வெள்ளைச்சாமி 35, குமார் 47, சண்முகம் 35 ஆகியோர் டூவீலரில் சுந்தரராஜபுரத்திற்கு வேலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர். நேற்று மாலை 6:00 மணிக்கு திண்டுக்கல் - குமுளி ரோட்டில் தனியார் பள்ளி வேன் இவர்களது டூவீலர் மீது மோதியது. வெள்ளைச்சாமி சம்பவ இடத்தில் பலியானார். குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். சண்முகம் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார். வேன் டிரைவர் மூர்த்தியை 65 பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !