உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை கொட்டி எரிப்பதால் நோய் தொற்று அபாயம்

குப்பை கொட்டி எரிப்பதால் நோய் தொற்று அபாயம்

மின் பெட்டியால் விபத்துபெரியகோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் மின்கம்ப மீட்டர் பெட்டிகள் சேதமடைந்தது உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .மக்கள் நடமாடும் பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணி, பாறைப்பட்டி........---------கால்நடைகளால் இடையூறுதிண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயம் நிலையில் கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.செந்தில்குமார், திண்டுக்கல்..........----------நிழற் குடையில் போஸ்டர்கள்திண்டுக்கல் நாகல்நகர் பஸ் ஸ்டாப் நிழற் குடையில் போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமாக உள்ளது .இதனால் அங்கு அமர்ந்திருக்கும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். போஸ்டர் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் . பழனிச்சாமி, திண்டுக்கல்...........----------சாய்ந்த நிலையில் பெயர் பலகைதிண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்கு கரை பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் மக்கள் பயத்துடன் செல்கின்றன. சாய்ந்த நிலையில் உள்ள பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்................-----------ரோடு சேதத்தால் அவதிவேடசந்துார் ஒன்றியம் கல்வார்பட்டி இருந்து காந்திநகர் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர் .ரோட்டை புதுப்பிக்க நிர்வாகம் முன் வர வேண்டும்.- எஸ்.சக்திவேல், கல்வார்பட்டி..............-------------குப்பையை கொட்டி எரிப்புநிலக்கோட்டை ஆச்சிநகர் முதல் தெருவில் குப்பையை கொட்டி குவித்து தீ வைத்து எரிக்கின்றனர் .இதனால் அருகே உள்ள குடியிருக்கும் மக்கள் பாதிக்கின்றனர் .குப்பையை கொட்டாமல் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் .விக்னேஷ் நிலக்கோட்டை.........-------------பாதையில் கழிவு நீர் தேக்கம்முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி வடக்கு தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் பாதையில் தேங்கி துர் நாற்றம் வீசிக்கிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது . சாக்கடை கட்டித்தர வேண்டும்.பாலகிருஷ்ணன், செட்டியபட்டி .........-------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை