உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் பரவுது தொற்று

குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் பரவுது தொற்று

செடிகளால் விபத்து : வடமதுரை அருகே நாடுகண்டனுாரில் மின்கம்பத்தின் உச்சி வரை படர்ந்துள்ள செடிகளில் ஏறி தேவாங்கு போன்ற அரிய வகை உயிரினங்கள் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது. இதன் செடிகளை அகற்ற மின்வாரியம் முன் வர வேண்டும்.---முருகன், வடமதுரை.மருத்துவமனையில் மாடுகள் : நத்தம் அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில் மாடுகள் சுற்றி திரிவதால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கும் , மருத்துவ பணியாளர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வீரா, நத்தம்.தண்ணீர் தொட்டி கீழ் குப்பை : நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி முத்தாலபுரம் அங்கன்வாடி மையம் அருகே குடி தண்ணீர் தொட்டி கீழ் குப்பை , புளுக்கள் கொசுக்ள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவுவதால் இதை சரிசெய்ய வேண்டும்.-அய்யர்பாண்டி, முத்தாலபுரம்.சேதமான ரோடு : பழநி மாரியம்மன் கோயில் தெரு 9வது வார்டில் 4மாதமாக ரோடு சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது.போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர் .பாதையை புதுப்பிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜன், பழநி.தரைப்பாலம் சேதம் : பழநி ஆர்.எப். ரோட்டில் இருந்து ஸ்டேட் பாங்க் ரோடு சந்திக்கும் பகுதி தரைப் பாலம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது .விபத்து ஏற்படும் முன் அதை சரி செய்ய வேண்டும். பாலத்தின் உயரத்தையும் தாழ்வாக அமைக்க வேண்டும்.-முகமது ஜின்னா, மானுார்.குப்பையை கொட்டி தீ வைப்பு : பட்டிவீரம்பட்டி - தேவரப்பன்பட்டி ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ்குமார்,தேவாரப்பன்பட்டி.கழிவு நீர் தேக்கத்தால் அவதி : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. இங்கு அதிகளவில் பயணிகள் வந்து செல்வதால் கழிநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.-செந்தில், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ