பயணிகளை பரிதவிக்கவிடும் பஸ் ஸ்டாண்ட்
திண்டுக்கல் மாவட்ட பஸ் ஸ்டாண்ட் நடை பாதைகளை கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ள நிலையில் டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களையும் பஸ்கள் சென்று வரும் பகுதிகளில் நிறுத்தி இடையூறு செய்கின்றனர். இதை நன்கு தெரிந்தும் கட்சியினர் குறுக்கீட்டால் எதையும் கண்டுகொள்ளாமல் போலீசார், உள்ளாட்சி துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.