உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துணி உலர்த்தும் பகுதியாக மாறிய பஸ் ஸ்டாப் நிழற்குடை

துணி உலர்த்தும் பகுதியாக மாறிய பஸ் ஸ்டாப் நிழற்குடை

சேதமான ரோடு : ஆர். புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து பாறைப்பட்டி செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. ரோட்டை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ----பூபதி, செங்குளத்துப்பட்டி.விபத்தில் மின் கம்பம் : அய்யலுார் முராரி சமுத்திரம் குளத்தின் வழியில் மின் கம்பம் சாய்ந்து கொண்டே வருகிறது. முழுவதும் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இதை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---ராஜா, அய்யலுார்.பொதுக்கழிப்பறை சேதம் : பழநி அருகே நெய்க்காரபட்டி பெரியகலைமுத்துார் 10 வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது . விஷ பூசிகள் வருவதால் கட்டடத்தை பராமரிக்க வேண்டும்.-வினோத், நெய்க்காரப்பட்டி.ஆக்கிரமிப்பில் நிழற்குடை : தாண்டிக்குடி அம்பேத்கார் காலனி பஸ் ஸ்டாப் நிழற்குடை துணி உலர்த்தும் பகுதியாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் ஒதுங்ககூட முடியாமல் தவிக்கின்றனர். துறை அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாரிமுத்து, தாண்டிக்குடி.சாக்கடையில் செடிகள் : பழநி அருகே புதுஆயக்குடி 18 வது வார்டு அப்துல் கலாம் நகரில் சாக்கடை துார் வாராமல் செடிகள் வளர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் துார் வார வேண்டும்.-ஜின்னா, பழநி.சேதமான மேன்ஹோல் : திண்டுக்கல் நாராயண நகர் ஆவின் பாலகம் எதிரே பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்துள்ளது. பல நாட்களாக அப்படியே உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேன்ஹோலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜ்குமார், திண்டுக்கல்.மலை போல் குப்பை : பழநி புது தாராபுரம் ரோடு கணபதிநகரில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது .பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பும் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.-பூமாரி, பழநி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை