மேலும் செய்திகள்
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
30-Nov-2025
திண்டுக்கல்: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவருக்கு 2026ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசின் விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.inவிண்ணப்பித்து கருத்துருவினை திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் டிச.31 க்குள் சமர்பிக்க வேண்டும்.
30-Nov-2025