உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீரமைக்கலாமே..: ரயில்வே கிராசிங்களில் சேதமான ரோடுகள் , பள்ளம்,மேடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சீரமைக்கலாமே..: ரயில்வே கிராசிங்களில் சேதமான ரோடுகள் , பள்ளம்,மேடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

மாவட்டத்தில் திண்டுக்கல் -- மதுரை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, திண்டுக்கல்- - திருச்சி, திண்டுக்கல் - - கரூர் வழித்தடங்களில் ரயில்வே பாதை செல்கிறது. இந்த ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் கிராசிங் உள்ளன. தண்டவாளத்தின் இரு புறங்களிலும் உள்ள ரயில்வே கேட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரோடு சேதமடைந்த நிலையில் அனைத்து இடங்களும் பெரிய பள்ளங்களாக மாறிவிட்டன. குண்டும் குழியுமாக உள்ள இந்த ரோட்டை கடந்து செல்ல டூவீலர்கள் , கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சிரமமாக உள்ளது. ரயில்வே கேட் திறக்கும் போது இரண்டு பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்கின்றன. அப்போது பள்ளமான பகுதிகளில் இறங்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக டூவீலர்களில் வருவோர் விபத்தை சந்திக்கின்றனர். சேதமடைந்த நிலையில் உள்ள இந்த ரோடுகளை விரைந்து சீரமைப்பு செய்து வாகனங்களை விபத்தின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை