UPDATED : டிச 04, 2025 05:57 AM | ADDED : டிச 04, 2025 05:52 AM
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரம் உள்ள செடிகளை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை பொறுத்தமட்டில் ரோட்டோரம் வளரும் புதர் செடிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவின் காரணமாக செடிகள் விரைவில் அடர்ந்து வளர்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வனவிலங்குகள் புதர் செடிகளுக்குள் தெரியாத நிலையில் மனித வனவிலங்கு மோதலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. இதை கடந்து செல்லும் வாகனங்களான பஸ் உள்ளிட்டவை அடர்ந்துள்ள செடிகளால் கீறல்,கண்ணாடி சேத மடைகின்றன. நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது செடிகளை வேரோடு அகற்றாமல் கிளைகளை அகற்றுவதால் இவை விரைவில் துளிர் விடுகின்றன. சில மாதங்களில் துரிதமாக வளரும் சூழலில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரங்களில் வேரோடு செடிகள் அகற்றப்படாத நிலையில் ஊர் பெயர் பலகைகள் மறைவு , வளைவுகள்உள்ளிட்ட ரோடு சிக்னல்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை புதர்செடிகளை வேரோடு இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பட்சத்தில் இவை எளிதில் வளராத சூழல் ஏற்பட்டு ரோடுகள் பளிச்சிடும். இதன் மீது மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதில்லை
கொடைக்கானல், தாண்டிக்குடி மலை ரோடுகள் ஒரு வழித்தடமாக உள்ளது.இதில் வளரும் செடிகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இச்செடிகளை கண் துடைப்பாக நெடுஞ்சாலைத்துறை அகற்றுவதால் சில வாரங்களில் துளிர் விடுகின்றன.இவற்றை இயந்திரங்கள் கொண்டு வேரோடு அகற்றும் பட்சத்தில் இப்பிரச்னை சரி செய்யப்படும். ரோட்டோர செடிகள் குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் இனியாவது இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி மலைப்பகுதி சார்ந்த ரோடுகளில் உள்ள புதர்களை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். --பாண்டியன், இயற்கை ஆர்வலர், கொடைக்கானல்.