ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இதில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, தலைமையில் பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கிலிருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.