உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / த.தே.க.,வினர் மீது வழக்கு

த.தே.க.,வினர் மீது வழக்கு

வடமதுரை: வடமதுரை தமிழர் தேசம் கட்சி நகர செயலாளர் செந்தில்குமாரின் வீட்டில் அக்.26 இரவு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. அவரது மகனுக்கும் அதே பகுதி சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது. 17 வயது 2 சிறுவர்களை வடமதுரை போலீசார் கைது செய்தனர். குண்டு வீச்சை கண்டித்து அக்கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன், மாவட்ட செயலாளர் ஆண்டி உள்ளிட்ட சிலர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி