உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜிம் உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு

ஜிம் உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு

வேடசந்தூர்; ஜிம் உரிமையாளரை மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கி, ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி எதிரே ஜிம் வைத்து நடத்தி வருபவர் கணேசன் 28. இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பரிடம் பேசிய ஆடியோவை வைத்து சிலர் மிரட்டி வந்துள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு கணேசனை வேடசந்தூர் முத்துப்பாண்டி, ஷேக் அப்துல்லா, சுல்தான் ஆகிய மூவர், காக்காதோப்பு பிரிவுக்கு வரும்படி அழைத்துள்ளனர். அங்கு சென்ற கணேசனிடம் ரூ.1லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்றவுடன், கீழே தள்ளி பீர் பாட்டிலால் தாக்கியதாக கணேசன் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை