மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
15-Oct-2025
ஜலகண்டாபுரம், நிலத்தகராறில் மூதாட்டியை தாக்கியதாக, 4 பேர் மீது பெண் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜலகண்டாபுரம் அருகே பக்கநாடு கிராமம் கோவில் காட்டில் குடியிருந்து வருபவர் சாந்தி, 60. விவசாயி. இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த சரவணன் குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்சனை உள்ளது. கடந்த அக்., 24ல், இருதரப்புக்கு இடையே அடிதடி ஏற்பட்டு, பலத்த காயத்துடன் சாந்தி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகார்படி ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து நேற்று சரவணன், 53, அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அபிதா, நடராஜன் ஆகிய நான்கு பேர் மீது, பெண் கொடுமை உட்பட, 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.--------------------------
15-Oct-2025