உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்; திண்டுக்கல்லில் சென்னை குழு

வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்; திண்டுக்கல்லில் சென்னை குழு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சலை தடுக்க சென்னை சுகாதாரத்துறை குழுவினர் முகாமிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.'ஸ்கரப்டைபஸ்' எனும் வகை சிறிய பூச்சிகள் கடிப்பதால் உன்னிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இவைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அருகிலிருக்கும் செடிகள் மூலம் அவ்வழியாக செல்லும் மனிதர்கள் உடலில் தொற்றிக்கொண்டு கடிக்கின்றன. மருத்துவமனை பரிசோதனையில் டெங்கு காய்ச்சலின் அறிகுறியும் இருப்பதால் இந்த வகை காய்ச்சலை கண்டறிய சிரமப்படும் நிலை உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் 2024 டிசம்பரிலிருந்து உன்னிக்காய்ச்சல் பாதிப்பால் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரத்தில் இருவர் இறந்தனர். தற்போது உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் 8 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.இக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2 பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி, நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், அதன் அருகிலுள்ள பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு செய்து துாய்மைப்படுத்த உத்தரவிட்டனர். ஆய்வகங்களை ஆய்வு செய்து உன்னிக்காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை