மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
21-Dec-2024
சின்னாளபட்டி: மாநில ஹேண்ட்பால் போட்டியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மூன்றாமிடம் பெற்றனர்.பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வி துறை சார்பில் திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்கு பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டிகள் நடந்தது. இதில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மூன்றாம் இடத்தை பெற்றது. வெற்றி மாணவர்களுக்கான பாராட்டு விழா தாளாளர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் திலகம் பதக்கம் ,சான்றிதழ் வழங்கினார். துணை முதல்வர் வெண்ணிலா வரவேற்றார்.மேலாளர் பாரதிராஜா, ஹேண்ட்பால் பயிற்றுநர்கள் அசோக்குமார், செந்தில் குமார், உடற் கல்வி ஆசிரியர் ஆரோக்கிய ரஞ்சனி பங்கேற்றனர்.
21-Dec-2024