முதல்வர் கோப்பை போட்டி
திண்டுக்கல்; தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆக. 26 ல் தொடங்கியது. செப். 12 ம் தேதி வரை நடக்கும் இப்போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கிறது. அதன்படி நேற்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 100 மீ., 1500 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், கபடி, வாலிபால், சதுரங்கம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.