உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் கோப்பை -கிரிக்கெட் திண்டுக்கல் அணி வெற்றி

முதல்வர் கோப்பை -கிரிக்கெட் திண்டுக்கல் அணி வெற்றி

திண்டுக்கல் : முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட மாணவியர் அணி வெற்றி பெற்றது.மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான திண்டுக்கல் கிரிக்கெட் போட்டிகள் செப். 10 முதல் 13 ம் தேதி வரை நடந்தது. பிரஸித்தி வித்யோதயா பள்ளி மாணவர் ,மாணவியர் அணி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்படி மாநில போட்டிகள் அக். 10 ம் தேதி முதல் 13 தேதி வரை 38 மாவட்டங்களுக்கு சென்னையில் நடந்தது. இதில் மாநில அளவிலான முதல்வர் கோப்பையை திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி மாணவியர் அணிவினர் வென்றனர். முதல்வர் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை