உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் விழாவில் மோதல்; கைது

கோயில் விழாவில் மோதல்; கைது

வேடசந்துார்: பூத்தாம்பட்டி ஏ.டி., காலனி கோயில் திருவிழாவில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட 14 பேரை வேடசந்துார் போலீசார் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.ஏ.டி. காலனி பட்டாளம்மன் கோயில் விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த போது வெளியூர் இளைஞர்கள் சிலர் மேடை அருகே சலசலப்பை ஏற்படுத்தினர். ஊர் மக்கள் அமைதியாக இருக்கும்படி கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெளியூர் இளைஞர்கள் தாக்கியதில் கிராமத்தினர் ஐந்து பேர் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் அம்மாபட்டி ஜீவா 32, பாலமுருகன் 21, கோபிநாத் 25, கொடிக்கால்பட்டி முனீஸ் குமார் 24 , ஜோதி முனீஸ் 24, மதன் பாபு 22, கல்லூரி மாணவர், இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேரை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !