மழையில் இடிந்த பள்ளி கூரை திறந்தவெளியில் வகுப்பு
திண்டுக்கல்: பழநி அருகே ஆயக்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கூரை இடிந்து விழுந்ததால் திறந்த வெளியில் வகுப்பு நடக்கிறது. பழநி பழைய ஆயக்குடியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மழையால் பள்ளியின் கூரை இடிந்து விழுந்தது.8 வகுப்பறைகளில் 5 அறைகள் சிதிலமடைந்து உள்ளன. திறந்த வெளியில் வகுப்பு நடக்கிறது. இதேபோல் கீரனுார் பேரூராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.