உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இட்லி பொடியில் கரப்பான் பூச்சி

இட்லி பொடியில் கரப்பான் பூச்சி

திண்டுக்கல்,: திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரபாகரன். இவர் மனைவி அங்குள்ள ஒரு கடையில் 100 கிராம் எடை கொண்ட இட்லி பொடி பாக்கெட்டை வாங்கி உள்ளார். அதை திறந்து தட்டில் வைத்து சாப்பிட முயன்ற போது இறந்தநிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள சம்பந்தபட்ட இட்லி பொடி தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை