கலெக்டர் ஆய்வு
வத்தலக்குண்டு; வத்தலக்குண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். பெத்தானியாபுரம், ராமகிருஷ்ணாபுரத்தில் இலவச வீட்டு மனை பட்டா, வாடிப்பட்டியில் வேளாண் துறை சார்பில் தென்னையில் ஊடு பயிர் சாகுபடி, பருத்தியில் துவரை உளுந்து சாகுபடி ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டரிடம் பணிகள் குறித்து துறையினர் விளக்கினர். அரசு மருத்துவமனை குன்னுவாரன்கோட்டை மேம்பால பணிகள், நடகோட்டை ஊராட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 2 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், ஊராட்சி ஒன்றிய பள்ளி கூடுதல் கட்டட பணிகளையும் ஆய்வு செய்தார்.