கல்லுாரி மாணவர் பலி
சின்னாளபட்டி: பழநி மஞ்சநாயகன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 23. விடுதியில் தங்கி காந்திகிராம பல்கலையில் எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது டூ வீலரில் சின்னாளபட்டி நோக்கி புறப்பட்டார். சின்னாளபட்டி விலக்கு அருகே எதிரே வந்த ஆட்டோ மோதியதில் இறந்தார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.