உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டி பெருமாள்மலை உச்சியில் சுயம்பு பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சில ஆண்டுகள் முன்னர் வரை முறையான பாதை வசதியின்றி ஒற்றையடி பாதையில் மலை உச்சிக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர். தற்போது கொல்லப்பட்டி, ஜி.புதுார், எம்.வி.நாயக்கனுார் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மலை உச்சி வரை பாதை அமைத்ததுடன் கோயிலில் திருப்பணி செய்து முன்மண்டபமும் கட்டி உள்ளனர். நவ.14ல் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று காலை மஹா சுதர்சன ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கியது. சுற்று கிாரம பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி