மேலும் செய்திகள்
உசிலம்பட்டியில் ஜமாபந்தி
15-May-2025
மே 14 முதல் உசிலம்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி
10-May-2025
Playoff Raceல் நீடிக்குமா லக்னோ?
04-May-2025
நிலக்கோட்டை: நிலக்கோட்டை தாலுகாவில் ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் வத்தலக்குண்டு, உசிலம்பட்டி, நிலக்கோட்டை,மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழக நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில், வத்தலக்குண்டு பேரூராட்சி காமராஜர் நகர் அரசு கள்ளர் மாணவர்கள் விடுதிக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் புதிய சமுதாயக்கூடம் கட்ட வருவாய்துறையினர் அளந்துள்ளனர். கள்ளர் கல்விக் கழக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழகம் பெயரில் பட்டா வழங்க கோரியும் மனு கொடுத்தனர்.
15-May-2025
10-May-2025
04-May-2025