உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டிஎன்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி தியானா ,17 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக கூடைப்பந்தாட்ட அணிக்கு தேர்வான இவர் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடந்த தேசிய போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடினார். இப்போட்டியில் 38 அணிகள் பங்கேற்ற இதன் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி மகாராஷ்டிரா அணியுடன் மோதி 53 : 49 என்ற புள்ளிகளில் வென்றது.தமிழக அணியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்ற மாணவி, பயிற்சியாளர்கள் செந்தில்குமார், வெண்மணி ஆகியோரை மேலாண்மை தலைவர் முரளி,பள்ளித்தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, முதல்வர் ராம்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை