மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு ஊர்வலம்
25-Jan-2025
விளையாட்டு விழா
29-Jan-2025
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரத்தில் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பேட்டரி வண்டிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் இதுவரை 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி செலவில் புதிதாக ரோடுகள் போடப்பட உள்ளது. ரூ .15 கோடியில் லிப்ட் வசதியுடன் நகரும் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.லக்கின் கோட்டை முதல் பழநி வரை நான்கு வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு மரங்கள் நடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, சி.எஸ்.ஆர்., சேவை தலைவர் மிஷேல் டொமினிக்கா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கணக்காளர் சரவணகுமார், செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.
25-Jan-2025
29-Jan-2025