| ADDED : பிப் 03, 2024 01:40 AM
சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையின் 37வது பட்டமளிப்பு விழா 3 கல்வியாண்டு மாணவர்களுக்கு மார்ச் 9ல் நடக்க உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் 2019 செப். 13க்குப்பின் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு நடக்கவில்லை. இதன்பின் 2022 நவ. 11ல் நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர். இதில் 2018---19, 2019--20 கல்வியாண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. எஞ்சிய கல்வியாண்டு மாணவர்களுக்கு தனியே பட்டமளிப்பு நடக்கும் என பல்கலை நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது இதற்கான அறிவிப்பை பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் '2020--21, 2021--22, 2022--23 கல்வி ஆண்டுகளுக்கான 37-வது பட்டமளிப்பு விழா மார்ச் 9ல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இது தொடர்பாக பிப். 15க்குள் பல்கலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.