காட்டுமாடு தாக்கி தம்பதியினர் காயம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டுமாடு தாக்கி தம்பதியினர் காயமடைந்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரியை சேர்ந்தவர் விக்னேஷ் 30, இவரது மனைவி விஜயலட்சுமி 28. இருவரும் நேற்று முன்தினம் மாலை டூ வீலரில் கலையரங்கம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில் இருவரும் விழுந்தனர். 7 மாத கர்ப்பிணியான விஜயலட்சுமி, கணவர் விக்னேஷ் லேசான காயத்துடன் தப்பினர். கொடைக்கானல் வனத்துறையினர் காட்டுமாடை விரட்டி, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். நகர் பகுதியில் காட்டுமாடு அச்சுறுத்தலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.