| ADDED : பிப் 22, 2024 06:17 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான லீக் போட்டியில் கொடைரோடு கொடை சி.சி அணி வெற்றி பெற்றது.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான லீக் போட்டியில் கொடைரோடு கொடை சி.சி., அணி 25 ஓவரில் 5 விக்கெட் இழந்து 163ரன்கள் எடுத்தது. மனோஜ்குமார் 48,யஸ்வந்த் 30, வினோத் கண்ணன் 32ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133ரன்கள் எடுத்தது. மதுசுதனன் 35ரன்கள், மனோஜ்குமார் 4, பிரகதீஸ் 3 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக். போட்டியில் திண்டுக்கல் ஹரிவர்ணா சி.சி. அணி 44.2 ஓவரில் 263 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. கிஷோர்குமார் 40, முனீஜ் குருசரண் 35, கவுதம் 71ரன்கள், ஜான் விக்டர் 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் சி.சி.அணி 19.1 ஓவரில் 71 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ரோஷன் 34ரன்கள், சந்துரு 6 விக்கெட் எடுத்தனர்.ஸ்ரீ.வீ.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் வேடசந்துார். சீனிபாலா சி.சி. அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 177ரன்கள் எடுத்தது. அருண் சிவகுமாரன் 74(நாட்அவுட்)ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சி.சி.அணி 27.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து 179ரன்கள் மட்டுமே எடுத்தது.பாலகிருஷ்ணன் 70ரன்கள், அருண் சிவகுமாரன் 3 விக்கெட் எடுத்தனர். ஸ்ரீ.வீ.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக்.போட்டியில் வேடசந்துார் ஜாஹிர் பிராமிசிங் லெவன் அணி 27 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அருள்வசந்தகுமார் 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்சு ஷர்ட்ஸ் சி.சி. அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழந்து 115ரன்கள் எடுத்து வென்றது. தனபால் 41,.விஸ்வநாதன் 45ரன்கள், மருதுபாண்டியன் 3 விக்கெட் எடுத்தனர்..பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக்.போட்டியில் எரியோடு ஸ்கில் சி.சி. அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 134ரன்கள் எடுத்தது. கார்த்திகேயன் 31ரன்கள், ராகேஷ் பாலாஜி 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சி.சி.அணி 15.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 135ரன்கள் எடுத்து வென்றது. உதயகுமார் 69ரன்கள், உதயக்கனி 3 விக்கெட் எடுத்தனர்.