உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பாரத் சிசி அணி 22.5 ஓவர்களில் 149 க்கு ஆல்அவுட் ஆனது. புனிதன் 48, நிரஞ்சன் 27, மருதைவீரன் 4 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் யங்ஸ்டர்ஸ் அணி 24.5 ஓவர்களில் 150/7 எடுத்து வென்றது. வருண்கார்த்திக் 36, கோவிந்தராஜன் 33. நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி 25 ஓவர்களில் 211/5. மணிகண்டன் 89, கோவிந்தராஜன் 31. மாதேஷ் 25, உதயகுமார் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் லெவன்ஸ்டார் சிசி அணி 21.3 ஓவர்களில் 135/4 எடுத்தது. ரன் ரேட் அடிப்படையில் யங்ஸ்டார் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ