உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: பிரசித்தி வித்யோதயா வெற்றி

கிரிக்கெட் லீக்: பிரசித்தி வித்யோதயா வெற்றி

திண்டுக்கல் : சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் போட்டியில் பிரசித்தி வித்யோதயா பள்ளி வெற்றி பெற்றது.லீக்போட்டிகளின் அரையிறுதி, இறுதிப்போட்டி ரிச்மேன், பி.எஸ்.என்.ஏ., என்.பி.ஆர்., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.முதல் அரையிறுதிப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., அணி முதலில் பேட்டிங் செய்து 38.3 ஒவர்களில் 132 க்கு ஆல்அவுட் ஆனது. முகமதுஅஸ்வாக் 35, ஸ்ரீஹரி, ஆர்யன்கட்கார் தலா 3 விக்கெட். சேசிங் செய்த பிரஸித்தி வித்யோதயா ஏ அணி 19.3 ஓவர்களில் 133 எடுத்து வெற்றி பெற்றுது. ஸ்ரீஹரி 67(நாட்அவுட்), ரித்திஷ் 48(நாட்அவுட்).இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரசித்தி வித்யோதயா பி அணி 45 ஓவர்களில் 212/6. விஷ்வஹரிணி 82(நாட்அவுட்), தனிஷ் 39, மாதேஷ் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் பட்போர்டு அகாடமி அணி 30.3 ஓவர்களில் 94 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.இறுதிப்போட்டியில் முதலில் களமிறங்கிய பிரசித்தி வித்யோதயா ஏ அணி 45 ஓவர்களில் 255/2. ரித்திஷ் 103(நாட்அவுட்), ஸ்ரீஹரி 57(நாட்அவுட்), முகமதுபாஹீம் 42, ெஹமந்த் 26. சேசிங் செய்த பிரஸித்தி வித்யோதயா பி அணி 39.1 ஓவர்களில் 136 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சச்சின் 33, தனிஷ் 31, மதுபிரசாத் 30(நாட்அவுட்), கீர்த்திவாசன்,ஹரிபிரசாந்த் தலா 3 விக்கெட்.பிரசித்தி வித்யோதயா ஏ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சிறந்த பேட்ஸ்மனாக பிரஸித்தி வித்யோதயா பி அணி சச்சின், பவுலராக பிரசித்தி ஏ அணி அணி கீர்த்தி வாசன் தேர்வாகினர். சிறந்த ஆல்ரவுண்டராக எஸ்.எஸ்., அகாடமி சித்தார்த்,பிராமிஸிங் யங்க்ஸ்டர் வீரராக ரித்திஷ், ஒட்டன்சத்திரம் பட்ஸ் அணி அபினயாதேர்ந்தெடுக்கப்பட்டனர். பிளேயர் ஆப் த டோர்னமென்டாக ஸ்ரீஹரி தேர்வாகினார்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக கிரிக்கெட் சங்க முன்னாள் உதவி செயலர் வெங்கட்டராமன் பரிசு, கோப்பையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை