ஆக்கிரமிப்பால் நெரிசல்; அல்லாடும் பாதசாரிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பால் குறுகலாகி அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் தொடர்கிறது.இதோடு ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களாலும் நெரிசல் உருவாகின்றன. இது மாவட்டத்தில் அனைத்துநகர், கிராம பகுதிகளிலும் காணப்படுகிறது .இதன் காரணமாக பாதசாரிகள் ரோட்டின் நடுவில் நடந்து செல்லும் நிலை உள்ளது.இதனால் நெரிசலோடு விபத்துக்களும் நடக்கிறது .கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டி போலீஸ், வருவாய், உள்ளாட்சிகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.