மேலும் செய்திகள்
ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
12-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி எனாமல் பேக்ட்ரி ரோட்டை சேர்ந்தவர் லாசர் மனைவி ராஜம்மாள் 50. ஓட்டல் நடத்துகிறார். இன்று (அக்.,29) வழக்கம்போல் ஓட்டலில் மதிய உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு அடுத்தடுத்து இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன. ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வெடிக்காத நிலையில் கடைக்குள் இருந்த மேலும் 3 சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். இவ்விபத்தில் கூரை வெடித்து சிதறியது; பொருட்கள் சேதமடைந்தன. சிறு காயங்களுடன் உயிர்தப்பிய ராஜம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Oct-2026