உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமடைந்த ரோடுகள்; குறுகலான கழிவுநீர் சாக்கடை அவதியில் ஒட்டன்சத்திரம் 16வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள்; குறுகலான கழிவுநீர் சாக்கடை அவதியில் ஒட்டன்சத்திரம் 16வது வார்டு மக்கள்

ஒட்டன்சத்திரம்: கழிவுநீர் சாக்கடை மிகவும் சிறியதாக இருப்பதால் தேங்கும் கழிவு நீர், தெரு ரோடுகள் சேதத்தால் டூவீலர்களை இயக்க கூட சிரமம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 17 வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர். வினோபா நகர், விஸ்வநாத நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு விஸ்வநாத நகரில் துாய்மை இந்தியா திட்டம் சார்பில் 2015 -- 16ல் கட்டப்பட்ட பெண்கள் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கே வராமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் கழிவு நீர் சாக்கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அமைக்க வேண்டி உள்ளது. சில தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை. பல இடங்களில் கழிவு நீர் சாக்கடை இடிந்து சேத மடைந்துள்ளது. சரி செய்யப்படாத ரோடுகள் எம்.சசிகுமார், பா.ஜ.,நகர பொதுச்செயலாளர்: வார்டில் உள்ள பல தெருக்களில் சாக்கடை வசதி இல்லை. கழிவு நீர் தேங்கி சுகாதராம் பாதிக்கிறது. விஸ்வநாத நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடும்பங்களுக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. திறந்தவெளி கழிப்பிடத்தை போக்க சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட தெரு ரோடுகளை இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. சப்வேயில் தேவை கூரை சிவமணி, மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்: குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை தினமும் அள்ளி அப்புறப்படுத்தப்படுகிறது. பழுதடைந்த தெருவிளக்குகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. மழைக்காலத்திலும் பயன்படுத்த ஏதுவாக சப்வே கூரை அமைக்கப்பட்டு உள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள சப்வேயில் கூரை வசதி செய்து தர வேண்டும். விரைவில் பட்டா பழனிச்சாமி கவுன்சிலர், (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக வினோபா நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் நகர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு மேல் வீட்டு பட்டா இல்லாமல் இருந்த பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. சமுதாய கழிப்பறையை யாரும் பயன்படுத்த முன்வராததால் அந்த இடத்தில் நுாலகம் அமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தெரு ரோடுகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ