மேலும் செய்திகள்
நிரம்பியது பழநி குதிரை ஆறு அணை
23-Oct-2024
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி சுற்றியுள்ள பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.இப்பகுதியில் பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. சில நாட்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டது. வரதமாநதி அணை, குதிரையாறு அணையில் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. பாலாறு பொருந்தலாறு அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் உள்ள குளங்களில் 24 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள குளங்களில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. நேற்றைய அணை நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணை 61.12 அடி (மொத்த உயரம் 65அடி) உள்ளது. நீர்வரத்து 21 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 9 கன அடியாக உள்ளது. வரதமாநதி அணையில் முழு கொள்ளளவான 66.47 அடி நிரம்பி உள்ளது. நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 110.9 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணையில் 77.44 அடி (80 அடி) தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 54 கன அடி, நீர் வரத்தும், வெளியேற்றமும் உள்ளது.
23-Oct-2024