உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திண்டுக்கல்: தை அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.தை அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு நடந்தது. திண்டுக்கல் நகரை சேர்ந்த மக்கள் காலை முதல் திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரை, ஆர்.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.ஆர்.எம்.காலனியில் வ.உ.சி. அறக்கட்டளை சார்பில் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழிபாடு நடந்தது. ஹிந்து மதத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தர்ப்பணம் கொடுத்தனர். ஏற்பாடுகளை செயலாளர் சாந்தினி பழனிசாமி, பொருளாளர் காசிநாதன் செய்தனர்.பழநி :பழநி சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு பலரும் அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். எள், பச்சரிசி கலந்த பிண்டம் தயாரித்து பிதுர்களை நினைத்து வழிபட்டு ஆற்றில் கரைத்தனர். அதன்பின் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். மேலும் வீடுகளில் முன்னோர்களின் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், அடிவாரம், மலை குகை கோயிலில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது.நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குவிந்தனர். இக்கோயில் அருகே உள்ள வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆஞ்சநேயரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதன் பின் மோட்ச தீபம் ஏற்றி, காகங்களுக்கு சாதம் வைத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை