உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீபம் அரோகரா கோஷத்துடன் தரிசனம்

பழநி முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீபம் அரோகரா கோஷத்துடன் தரிசனம்

பழநி,திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது.இக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் டிச.,7 திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடந்தது. டிச., 12 மாலை பரணி தீபம் ஏற்ற சண்முகருக்கு மகா தீபாராதனை நடந்தது.நேற்று (டிச., 13 ) நடந்த திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை,மதியம் சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தன. மதியம் 2:00 மணிக்கு பின் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதன்பின் மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாயரட்சை பூஜை,சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.கோயிலில் 4 மூலைகளில் தீபம் ஏற்ற வெளிப்பிரகாரத்தில் தீபகம்பத்தில் திருகார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை