உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பகல் கனவு காண்கிறார் திண்டுக்கல் சீனிவாசன் முத்தரசன் பேட்டி

பகல் கனவு காண்கிறார் திண்டுக்கல் சீனிவாசன் முத்தரசன் பேட்டி

திண்டுக்கல் : ''தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவார்கள் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகல் கனவு காண்கிறார். அது அவரின் உரிமை. அதை நான் கலைக்க விரும்பவில்லை,'' என, திண்டுக்கல்லில் இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறினார்.அவர் கூறியதாவது : திருப்பதி லட்டு விவகாரத்தை வைத்து மக்களை திசை திருப்புகிறார்கள். மக்களுக்கு தேவையான பல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மெட்ரோ, கல்வி நிதிகளை ஒதுக்க, மீனவர் பிரச்னைகளை தீர்க்க என 3 கோரிக்கைகளை முன் வைத்தார். மெட்ரோ திட்டத்திற்காக பணம் ஒதுக்கியுள்ளனர். கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழக ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இதை மறைப்பதற்காக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அரசு தனி துறையை உருவாக்க கேட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் முதல்வர், அமைச்சர்கள், நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். சுமுகமான முறையில் முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை