கண்மாயில் இறந்த பன்றிகள் வீச்சு
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கண்மாயில் வீசப்பட்ட இறந்த பன்றிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.நத்தம் அருகே கோபால்பட்டி தி.வடுகப்பட்டியில் கடைக்குளம் கண்மாய் உள்ளது. மழையால் இக்கண்மாய் நிரம்பியுள்ளது. கண்மாயிலிருந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன நீர் செல்கிறது.இக்கண்மாயில் நேற்று காலை இறந்த நிலையில் 5 பன்றிகள் மிதந்தன. இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறந்த பன்றிகளை சாக்குப்பைகளில் கட்டி கண்மாயில் மர்மநபர்கள் வீசி சென்றது தெரிந்தது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இறந்த பன்றிகளால் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.