உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்திகிராம முதுநிலை படிப்புகளுக்கு கியூட் தேர்வு பிப்.1 வரை விண்ணப்பிக்க அவகாசம்

காந்திகிராம முதுநிலை படிப்புகளுக்கு கியூட் தேர்வு பிப்.1 வரை விண்ணப்பிக்க அவகாசம்

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர 'கியூட்' தேர்வுக்கு பிப். 1 வரை விண்ணப்பிக்கலாம்.காந்திகிராம பல்கலையின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 2024 முதல் கியூட் பொது நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 23 முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் கியூட் தேர்வுமூலம் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பல்கலையின் அறிக்கையில், எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.டெக், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.எட், எம்.எட், உள்ளிட்ட 23 முதுநிலை படிப்புகளுக்கு கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். http://cuet.nta.nic.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகுதிகள், குறிப்பேடு உள்ளிட்ட தகவல்களை www.ruraluniv.ac.inஎன்ற பல்கலை இணையதளத்தில் இருந்து பெறலாம். பிப். 1 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை