உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலை வாங்கி தருவதாக மோசடி தம்பதியை காவலில் எடுக்க முடிவு

வேலை வாங்கி தருவதாக மோசடி தம்பதியை காவலில் எடுக்க முடிவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீருவீட்டில் பட்டதாரி வாலிபர்களுக்கு பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான தம்பதி மற்றொரு மோசடி வழக்கில் சிறையில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் அப்பகுதியில் கடை நடத்துகிறார். இவரது கடைக்கு வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து பணிமனை பஸ் கண்டக்டரான நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டி மாரிமுத்து வந்தார். அவரிடம் பி.எஸ்.சி., படித்த தன் மகன்கள் 2 பேர், தம்பி மகன் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என ராஜேந்திரன் கேட்டார். மாரிமுத்து தனக்கு தெரிந்த நபர் மூலம் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் பணி வாங்கலாம் என கூறியுள்ளார். அதை நம்பிய ராஜேந்தினிடம் மாரிமுத்து கரூரைச் சேர்ந்த குமாரையும் அறிமுகப்படுத்தினார். குமார்,''ரூ.36 லட்சம் கொடுத்தால் 6 மாதங்களில் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி விடலாம்,'' என்றார். அதன்படி ராஜேந்திரன் இருவரிடம் ரூ.36 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பிறகு தலைமறைவாயினர்.குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., முத்தமிழ் மற்றும் போலீசார் விசாரித்து மாரிமுத்து, குமார், அவரது மனைவி பூமகள், உறவினர்கள் சுசித்ரா, யோகேஸ்வரன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேலும் விசாரணையில் தேனி மாவட்டத்தில் இதேபோல மோசடியில் ஈடுபட்டு தேனி சிறையில் குமாரும், மதுரை மத்திய சிறையில் பூமகளும் இருப்பது தெரிந்தது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ