உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை மலர் கண்காட்சி தேதி அறிவிப்பில் தாமதம்; சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்

கொடை மலர் கண்காட்சி தேதி அறிவிப்பில் தாமதம்; சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்

கொடைக்கானல்; கொடைக்கானல் மலர் கண்காட்சி ,கோடை விழா தேதி அறிவிப்பு தாமதமாகி வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம்.62 வது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் மலர்படுகைகள் தயார் செய்யப்பட்டு 30 வகையான பூக்கள், ஒன்றரை லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. மலர் கண்காட்சிக்காக மலர்கள் , பழங்கள், காய்கறிகளில் 7 வகையான உருவங்கள் தேர்வு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.ஊட்டியில் மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைக்க கண்காட்சி மே 26 ல் நிறைவடைகிறது. ஏற்காட்டில் மே 23 ல் மலர்கண்காட்சி துவங்குகிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16 ல் வெளியாகிறது.இதை தொடர்ந்து கல்லுாரி, மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் இடம் பெற செய்வது என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. விடுமுறை நாட்களில் கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில் மலர்கண்காட்சிக்கான தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2024 மே 17 ல் மலர்க்கண்காட்சி துவங்கப்பட்டு 10 நாட்கள் நடந்தது. தோட்டக்கலைத்துறை மலர் கண்காட்சி நடத்த தயாராக உள்ள நிலையில் தேதி அறிவிப்பதற்கான காரணம் புரியாமல் உள்ளது.இதோடு மலர்கண்காட்சி தாமதாவது சுற்றுலா பயணிகள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி